Theme Check

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி தொகை ஒதுக்கீடு.. தமிழகத்திற்கு எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் !!

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி தொகை ஒதுக்கீடு.. தமிழகத்திற்கு எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் !!

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி தொகை ஒதுக்கீடு.. தமிழகத்திற்கு எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் !!
X

இந்தியாவில் கடந்த 2107ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது ஜிஎஸ்டி. அதனைத்தொடர்ந்து மாதம் மாதம் மாநில அரசுகளிடம் இருந்து மத்திய அரசுக்கு வரும் ஜிஎஸ்டி வசூல் குறித்து மத்திய அரசு அண்மையில் கூறியது. கடந்த அக்டோர் மாதத்தில் ரூ.1.30 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது என கூறியது.

எனினும் ஜிஎஸ்டி காரணமாக பெரும்பாலான மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இழப்பை ஈடுகட்டும் வகையில் குறிப்பிட்ட வருடங்களுக்கு இழப்பீடு தொகை வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகை வழங்கி வருகிறது.

money

இந்த நிலையில் இன்று 17 ஆயிரம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை மத்திய நிதியமைச்சகம் மாநிலங்களுக்கு விடுவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு 1,314.42 கோடி ரூபாய் விடுவித்துள்ளது. மகாராஷ்டிராவிற்கு அதிகபட்சமாக 3053.59 கோடி ரூபாய் விடுவித்துள்ளது. கர்நாடகாவிற்கு 1602 கோடி ரூபாய் விடுவித்துள்ளது. புதுச்சேரிக்கு 61.08 கோடி ரூபாய் விடுவித்துள்ளது.

அந்த வரிசையில் தமிழகத்திற்கு 1,314.42 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it