Theme Check

10-ம் ஆண்டு திருமண நாளை தாஜ்மஹாலில் பிரமாண்டமாக கொண்டாடிய பிரபல நடிகர்..!

10-ம் ஆண்டு திருமண நாளை தாஜ்மஹாலில் பிரமாண்டமாக கொண்டாடிய பிரபல நடிகர்..!

10-ம் ஆண்டு திருமண நாளை தாஜ்மஹாலில் பிரமாண்டமாக கொண்டாடிய பிரபல நடிகர்..!
X

பிரபல நடிகர் மற்றும் அவரது மனைவி இருவரும் தங்களது பத்தாவது ஆண்டு திருமண நாளை தாஜ்மஹாலில் பிரமாண்டமாக கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிகர் சிரஞ்சீவியின் நெருங்கிய உறவினர் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். கடந்த 2011-ம் ஆண்டு இவருக்கும், ஆந்திராவின் பிரபல தொழிலதிபரின் மகள் ஸ்நேகா ரெட்டி என்பவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர்.

டாலிவுட் சினிமாவின் ’ஸ்டார் கப்பிள்’ என்று சொல்லும் அளவுக்கு நட்சத்திர ஜோடிகளாக இருவரும் உள்ளனர். இந்நிலையில் அல்லு அர்ஜுன் மற்றும் ஸ்நேகா ரெட்டி இருவரும் தங்களுடைய 10-ம் ஆண்டு திருமண நாளை தாஜ்மஹாலில் கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை அல்லு அர்ஜுன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.


மேலும், அந்த பதிவில் இந்தாண்டு திருமண நாளை தாஜ்மஹாலில் கொண்டாடுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துகொடுத்த ஆக்ரா காவல் துறைக்கும் நன்றி தெரிவித்து அவர், தாஜ்மஹாலுக்கு அருகில் நின்ற போது ஒரு இந்தியனாக நான் பெருமை அடைந்ததாகவும் அல்லு அர்ஜுன் ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:
Next Story
Share it