Theme Check

ஏற்கனவே ஆப்பிள் திருடியவர், இப்போது தக்காளி திருடியதால் கைது!!

ஏற்கனவே ஆப்பிள் திருடியவர், இப்போது தக்காளி திருடியதால் கைது!!

ஏற்கனவே ஆப்பிள் திருடியவர், இப்போது தக்காளி திருடியதால் கைது!!
X

சேலம் மாவட்டத்தில் தக்காளியை பெட்டியோடு திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

இளம்பிள்ளை அடுத்த பெருமாகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த சங்கர் (26) என்பவர் காய்கறி கடை வைத்துள்ளார். இவரது கடையில் அதிகாலை 60 கிலோ எடையுள்ள 2 கிரேடு தக்காளி பெட்டி வைக்கப்பட்டிருந்தது.

கடை உரிமையாளர் சங்கர் காலையில் கடையைத் திறக்க வந்த போது ஒரு கிரேடு தக்காளி பெட்டி மட்டுமே வெளியே இருந்தது. இது குறித்து தக்காளி இறக்கியவரிடம் கேட்டபோது இரண்டு பெட்டி இறக்கி வைத்ததாக தெரிவித்தார்.

இதனை அடுத்து சிசிடிவி கேமராவை பார்த்தபோது ஒருவர் ஸ்கூட்டரில் வந்து தக்காளி பெட்டியை திருடிச் சென்றது தெரிய வந்தது. அந்த சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

tomoto theft

கடை உரிமையாளர் மற்றும் தக்காளி வியாபாரிகள், வீடியோவை வைத்து அந்த இளைஞரை பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்ததோடு, இதுகுறித்து மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் சங்கர், புகார் கொடுத்தனர்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்த வண்டி நம்பரை வைத்து விசாரணை செய்ததில், தக்காளி திருடிய நபர் வெண்ணந்தூர் தங்கசாலை வீதியை சேர்ந்த சின்ராஜ் (32) என்பது தெரியவந்தது.

இவர் ஏற்கனவே செவ்வாய்பேட்டை பகுதியில் ஆப்பிள் பெட்டி திருடிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர். இதனை அடுத்து தக்காளி திருடிய சின்ராஜை போலீசார் கைது செய்து சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

newstm.in

Next Story
Share it