பாராளுமன்றத்தில் மவுசு குறையாத அல்வா !
பாராளுமன்றத்தில் மவுசு குறையாத அல்வா !

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா தயாரித்து மத்திய நிதிநிலை அறிக்கை தயாரிப்பு பணியை தொடங்கி வைத்தார்.
பாராளுமன்றத்தில் ஒவ்வொரு வருடமும் மத்திய நிதிநிலை அறிக்கை அதாவது பட்ஜெட் சமர்ப்பிப்படும். அதற்கு முன்பு நிதிநிலை அறிக்கையை காகிதத்தில் அச்சடிக்கும் வேலை தொடங்குவது வழக்கம்.
அப்போது, நிதி அமைச்சர் அலுவலகத்தில் அல்வா தயாரித்து ஊழியர்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு பட்ஜெட் அச்சிடும் ஊழியர்களுக்கு நிதிஅமைச்சர் அல்வா கிண்டி வழங்குவது வழக்கத்தில் உள்ளது.

இந்நிலையில், 2021-22 -ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் காகிதமின்றி,அதாவது டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்ய மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. இதற்கானமுறையான அறிவிப்பை நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஆனாலும், வழக்கமான முறைப்படி அல்வா கிண்டி பட்ஜெட் தயாரிப்பு நடைமுறைகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணிகளை அல்வா கிண்டி தொடங்கி வைத்தார். நிதியமைச்சகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, பிப்ரவரி 1-ம் தேதி பாராளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கைதாக்கல் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பித்தக்கது.

