Theme Check

2 தலை, 4 கண்களுடன் அதிசய கன்றுக்குட்டி.. மக்கள் வியப்பு !!

2 தலை, 4 கண்களுடன் அதிசய கன்றுக்குட்டி.. மக்கள் வியப்பு !!

2 தலை, 4 கண்களுடன் அதிசய கன்றுக்குட்டி.. மக்கள் வியப்பு !!
X

இரண்டு தலை மற்றும் நான்கு கண்களுடன் அதிசய கன்றுக்குட்டி ஒன்று பிறந்துள்ள்தால் அதனை மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

அண்மைக்காலமாக பசுமாடு வித்தியாசமான கன்று குட்டிகளை ஈன்று வருவது குறித்த செய்தியை பார்த்து வருகிறோம். பல இடங்களில் மிகவும் உயரம் குறைவான கன்று குட்டிகளை ஈன்றரை கண்டோம். தற்போது மற்றொரு வியப்பான சம்பவமும் நடந்துள்ளது.

pasu

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூர் என்ற மாவட்டத்தில் விவசாயி ஒருவர் வளர்த்து வந்த பசு சமீபத்தில் கர்ப்பம் அடைந்தது. இந்த நிலையில் அந்த பசுவுக்கு கன்று குட்டி பிறந்த நிலையில் அந்த கன்று குட்டி இரண்டு தலை மற்றும் நான்கு கண்களுடன் கூடிய அதிசய கன்றுக்குட்டி ஆக இருப்பதை பார்த்து விவசாய ஆச்சரியமடைந்தார்

இதுகுறித்த தகவல் அந்த பகுதியில் பரவியவுடன் ஏராளமானோர் அந்த அதிசய கன்றுக்குட்டியை பார்க்க வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விலங்குகள் மருத்துவர் ஒருவர் கூறியபோது இரண்டு தலை நான்கு கண்களுடன் உள்ள கன்று குட்டி தற்போது வரை ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த கன்றுக்குட்டியை பார்க்க கூட்டம் குவிந்து வருகிறது.

newstm.in


Tags:
Next Story
Share it