ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன மீனவர் - வலையில் சிக்கிய அதிசய மீன்!
ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன மீனவர் - வலையில் சிக்கிய அதிசய மீன்!

மும்பை மர்பி கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரகாந்த் டாரே. இவர் மீன்பிடி தொழில் செய்துவருகிறார். மீன்கள் இனப்பெருக்க காலத்தை ஒட்டி மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப் பட்டிருந்தது. இது முடிவடைந்த நிலையில் தனது படகில் மீன்பிடிக்கச் சென்றார். முதல் நாளிலேயே வலையில் மிக அதிக அளவிலான மீன்கள் சிக்கின.
உடனடியாக வலையை இழுத்ததில் சந்திரகாந்த் வலையில் சுமார் 150 கோல் வகையான மீன்கள் வரை இருந்தன. அவருடன் மீன்பிடிக்கச் சென்றவர்கள் வலையில் சிக்கிய மீன்களைப் பார்த்ததும் பெரும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். அந்த வகை மீன்கள் எல்லாமே அதிக விலை போகக்கூடிய கோல் மீன்கள்.

கோல் மீன்களில் பல வகையான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மிகவும் விலை அதிகம். இந்த மீனின் பாகங்கள் மருந்துகள் மற்றும் பிற விலை உயர்ந்த பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுவதால் இவைகளுக்கு கிராக்கி தான். கரைக்கு திரும்பிய சந்திரகாந்த் அதிசய மீன்களை ஏலம் விட்டார். அவை அனைத்துமே சுமார் 1.33 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டன.
கோல் மீன் என்பது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் காணப்படும் ஒரு வகை கரும்புள்ளி குரோக்கர் மீன் வகையைச் சேர்ந்தது. இது மிகவும் விலை உயர்ந்த கடல் மீன்களில் ஒன்று. இந்த மீன் தங்க இதயம் கொண்ட மீன் என அழைக்கப்படுவதிலேயே இதன் சிறப்பை உணர முடியும்.

