அமேசான் அதிரடி! புனித்தின் படங்களை இலவசமாக பார்க்கலாம்!!
அமேசான் அதிரடி! புனித்தின் படங்களை இலவசமாக பார்க்கலாம்!!

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரை சிறப்பிக்கும் விதமாக அவரது படங்களை இலவசமாக பார்த்துக்கொள்ளலாம் என்று அமேசான் அறிவித்துள்ளது.
கன்னட சினிமா நடிகர் மற்றும் தயாரிப்பாளரான புனித் ராஜ்குமார், மாரடைப்பு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெங்களூரு விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உடற்பயிற்சியின்போது திடீரென கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், ரசிகர்கள் என லட்சக்கணக்கான பேர் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. புனித் தனது இரு கண்களை தானமாக வழங்கி இருந்தார்.

அவரது மறைவு இந்திய திரையுலகையே உலுக்கியது. அவருக்கு இந்தியாவில் பல்வேறு திரைத்துறை பிரபலங்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் அமேசன் பிரைம் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வரும் பிப்ரவரி 1 முதல் 28ஆம் தேதி வரை புனீத் ராஜ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள காவலுதாரி, மாயா பஜார், யுவரத்னா, லா மற்றும் பிரெஞ்ச் பிரியாணி ஆகிய படங்கள் அனைத்தும் இலவசமாக பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புனித் ராஜ்குமார் தயாரிப்பில் உருவாகி வரும் 3 புதிய படங்களையும் அமேசன் பிரைம் வாங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in

