Theme Check

அம்பானி குடும்பத்தின் மூத்த மருமகள் கிரிஷா ஷா.. அம்பானி மகன் திருமணம்.. வைரல் புகைப்படம் !

அம்பானி குடும்பத்தின் மூத்த மருமகள் கிரிஷா ஷா.. அம்பானி மகன் திருமணம்.. வைரல் புகைப்படம் !

அம்பானி குடும்பத்தின் மூத்த மருமகள் கிரிஷா ஷா.. அம்பானி மகன் திருமணம்.. வைரல் புகைப்படம் !
X

இந்தியாவின் பிரபலமான தொழிலதிபராக விளங்கும் அனில் அம்பானியின் பல தோல்விகள் சந்தித்தவர். எனினும் எப்படியும் சாதிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், அனில் அம்பானியின் மூத்த மகனான அன்மோல் அம்பானி-க்குத் திருமணம் நடந்துள்ளது. பணக்கார வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும் அன்மோல் அம்பானி தற்போது பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்.
anil ambani son

இந்நிலையில் கிரிஷா ஷாவு உடனான திருமணம் அன்மோல் அம்பானி வாழ்க்கையில் முக்கிய நிகழ்வாக இருக்கிறது. அன்மோல் அம்பானி திருமணம் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைலவர்கள் சமூக ஊடகங்களில் அன்மோல் அம்பானி மற்றும் கிரிஷா ஷாவு-வின் திருமணத்திற்கு முன்பு நடக்கும் பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்கள் பதிவிட்டு வந்த நிலையில் வைரலாகி வருகிறது.

anil ambani son

அன்மோல் அம்பானி - கிரிஷா ஷா ஞாயிற்றுக்கிழமை அன்மோல் அம்பானி மற்றும் கிரிஷா ஷா-வின் திருமணம் மிகவும் சிறப்பாகவும், பிரம்மாண்டமாகவும் நடந்தது. இந்தத் திருமணத்திற்கு ஜெயா பச்சன், அமிதாப் பச்சன், சுப்ரியா சுலே எனப் பரபலங்கள் கலந்து கொண்டனர். இது முழுமையாக காதல் திருமணம் இல்லை என்றாலும், திருமணத்திற்கு முன்பு நீண்ட காலம் அன்மோல் அம்பானி, கிரிஷா ஷா-வும் நட்பாக பழகியுள்ளனர். இந்தப் பழக்கம் திருமணத்தில் முடிந்துள்ளது.

anil ambani son

அன்மோல் அம்பானியின் மனைவியான கிரிஷா ஷா ஒரு சமூகச் சேவகர் மற்றும் தொழிலதிபர் ஆவார். அவர் டிஸ்கோ (Dysco) என்ற சமுகவலைதள நிறுவனத்தை உருவாக்கி நிர்வாகம் செய்து வருகிறார். Dysco வலைத்தளம் Dysco வலைத்தளத்தின் மூலம் மக்களை இணைக்க, இணைந்து உருவாக்க, ஒன்றாக இணைந்து சேவை அல்லது வர்த்தகத்தை உருவாக்க மற்றும் ஒன்றாக இணைந்து வேலை செய்ய உதவும் தளமாகும்.

anil ambani son

இந்த Dysco நிறுவனத்தை உருவாக்குவதற்கு முன்பு கிரிஷா ஷா இங்கிலாந்தில் அக்சென்ச்சர் நிறுவனத்தில் பணியாற்றினார். கிரிஷா ஷா அரசியல் பொருளாதாரத்தில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் உயர் படிப்பைத் தொடர்ந்தார். மேலும் சமூகக் கொள்கை மற்றும் மேம்பாட்டில் பட்டம் பெற்றவர் ஆவார். இந்த தம்பதியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல்வேறு தரப்பினரும் இவர்களுக்கு வாழ்த்து கூறினர்.

newstm.in

Tags:
Next Story
Share it