Theme Check

அமெரிக்க மணமகன்.. நாகர்கோவில் மணமகள்.. தமிழ் முறைப்படி சென்னையில் திருமணம்..!

அமெரிக்க மணமகன்.. நாகர்கோவில் மணமகள்.. தமிழ் முறைப்படி சென்னையில் திருமணம்..!

அமெரிக்க மணமகன்.. நாகர்கோவில் மணமகள்.. தமிழ் முறைப்படி சென்னையில் திருமணம்..!
X

சென்னை மாதவரம் பகுதியில் வசிக்கும் நாகர்கோவில் சாமிதோப்பு பகுதியை பூர்வீகமாகக் கொண்ட ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரனின் மகள் அகிலா (28).

இன்ஜினீயரான இவரும், அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணம் மிச்சிகன் பகுதியைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினீயர் பீட்டர் லாக்கர் (30) என்பவரும் காதலித்து கரம் பிடித்துள்ளனர்.

இவர்களின் திருமணம் சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. அமெரிக்கரான மாப்பிள்ளை பீட்டர் லாக்கர் தமிழரின் பாரம்பரிய உடையான பட்டு வேஷ்டி-சட்டை அணிந்திருந்தார்.

அவரது தாயார் லிசா லாக்கர், சகோதரர் ஜேக் லாக்கர், அவரது மனைவி மேகன் ஆகியோரும் தமிழக பாரம்பரிய உடை அணிந்திருந்தனர்.

அய்யா வழி முறையில் ‘மவுளி கல்யாண மணமாலை வாழ்த்தலக்கோ...’ என்ற பாடல் இசைக்க, மணமகன் பீட்டர் லாக்கர் மணப்பெண் அகிலா கழுத்தில் தாலி கட்டினார். பின்னர், தமிழ் முறைப்படி சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் நடைபெற்றது.

Next Story
Share it