Theme Check

இன்னும் 36 மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை! நீதிமன்றம் அதிரடி!

இன்னும் 36 மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை! நீதிமன்றம் அதிரடி!

இன்னும் 36 மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை! நீதிமன்றம் அதிரடி!
X

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் அளித்த வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றி வருவது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் மதுரையில் ரமேஷ் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு 2015ல் அறிவித்தது.

madurai court

அதன்படி மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தோடு அறிவிக்கப்பட்ட பிற மாநிலங்களுக்கான எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் அனைத்தும் துவங்கப்பட்டு விட்ட நிலையில், தமிழகத்தில் மட்டும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவதற்கான காரணங்களை மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

judgement

மேலும் இந்த கட்டுமான பணிகளை விரைவில் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இதனை மத்திய அரசு அரசிதழில் வெளியிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவின் விசாரணைக்கு பிறகு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை இன்னும் 36 மாதங்களில் முழுமையாக நிறைவடையும் எனவும், நீதிமன்ற உத்தரவுகளை எதிர்பார்க்காமல் கட்டுமானப் பணிகளை மத்திய அரசு முடித்துக் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Tags:
Next Story
Share it