Theme Check

ஒரே வார்த்தையை கூறி 23 பேரை ஏமாற்றிய அமுதா.. ரூ.87 லட்சத்தை ஆட்டைய போட்டது அம்பலம் !!

ஒரே வார்த்தையை கூறி 23 பேரை ஏமாற்றிய அமுதா.. ரூ.87 லட்சத்தை ஆட்டைய போட்டது அம்பலம் !!

ஒரே வார்த்தையை கூறி 23 பேரை ஏமாற்றிய அமுதா.. ரூ.87 லட்சத்தை ஆட்டைய போட்டது அம்பலம் !!
X

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பப்பியான் பிரபாகர். இவருக்கு, அமுதா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். தான் தி.நகரில் உள்ள பிரபல வர்த்தக நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியின் உதவியாளராக வேலை செய்வதாக அறிமுகப்படுத்திக்கொண்டார்.

மேலும் பங்குசந்தையில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறியதாகவும் தெரிகிறது. இதனை நம்பிய பப்பியான், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என 23 பேரை பங்கு சந்தையில் முதலீடு செய்ய வலியுறுத்தி சுமார் 87 லட்சம் ரூபாயை அமுதாவிடம் வழங்கியுள்ளார்.

money

இந்தநிலையில் அமுதா, அப்பணத்தை முதலீடு செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனிடையே பங்குசந்தையில் எந்தவித லாபமும் கிடைக்காததால் பப்பியான் இதுகுறித்து அமுதாவிடம் கேட்டுள்ளார். அப்போது உரிய பதில் அளிக்காமல், அவரை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். அதன்பின்னர் தான் தாம் ஏமாற்றப்பட்டது தெரியவரவே, பப்பியான் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார்.

money

அதன்பேரில் 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த அமுதாவை மதுரையில் வைத்து கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், இதுபோன்று 23 நபர்களிடம் வங்கி கணக்கு மூலம் 53 லட்ச ரூபாயும், ரொக்கமாக 34 லட்சம் ரூபாய் என மொத்தம் 87 லட்சத்து 25 ஆயிரத்து 499 ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.

மேலும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் வேறு எங்கும் இதுபோன்று ஏமாற்றியுள்ளாரா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it