சொன்னதை செய்து காட்டிய ஆனந்த் மகேந்திரா..!! குவியும் பாராட்டுக்கள்..!!
சொன்னதை செய்து காட்டிய ஆனந்த் மகேந்திரா..!! குவியும் பாராட்டுக்கள்..!!

கோவையில் 'ஒரு ரூபாய்க்கு இட்லி' விற்பனை செய்து பிரபலமானவர் கமலாத்தாள் 75. கோவை வடிவேலாம்பாளையத்தைச் சேர்ந்த இவரது சேவையை பாராட்டி பல அமைப்புகளும் பொதுமக்களும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.மகேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பாட்டியை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததோடு மஹிந்திரா குழுமத்தின் சார்பில் 1.75 சென்ட் நிலம் வாங்கி கமலாத்தாள் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து வழங்கினார்.இந்த காலி இடத்தில் வீடு கட்டும் பணிகள் தொடங்கின.
இந்த பணிகள் மே 5ஆம் தேதி நிறைவடைந்தன. தொடர்ந்து அன்னையர் தினமான நேற்று அவருக்கு வீடு ஆனந்த் மகேந்திரா குடும்பத்தினரால் வழங்கப்பட்டது.
எல்லோருக்கும் சந்தோஷம் கொடுக்க தன் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தவர்க்கு, சிறிது சந்தோஷம் கொடுக்கும் முயற்சியை விட வேறு ஒரு பெரிய சந்தோஷம் இல்லை. pic.twitter.com/KCN7urkSTG
— anand mahindra (@anandmahindra) May 8, 2022
Next Story

