மேலும் ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா பாசிட்டிவ் !
மேலும் ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா பாசிட்டிவ் !

விருதுநகர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா மூன்றாவது அலையில் நடிகர்கள், அரசியல் தலைவர்களும் இலக்காகி வருகின்றனர்.

அந்தவகையில், தற்போது மேலும் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதனையடுத்து, அவர் வீட்டிலேயே தனிமை படுத்திக் கொண்டார்.
அவர் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்று விட்டு திரும்பிய நிலையில் உடல்நல பாதிப்பு இருந்தது. இந்நிலையில் இன்று கிடைத்த பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
newstm.in

