Theme Check

உணவில் மயக்க மருந்து.. 17 பள்ளி மாணவிகளுக்கு கூட்டாக பாலியல் வன்கொடுமை நடந்த கொடூரம் !

உணவில் மயக்க மருந்து.. 17 பள்ளி மாணவிகளுக்கு கூட்டாக பாலியல் வன்கொடுமை நடந்த கொடூரம் !

உணவில் மயக்க மருந்து.. 17 பள்ளி மாணவிகளுக்கு கூட்டாக பாலியல் வன்கொடுமை நடந்த கொடூரம் !
X

செய்முறை வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வதாக கூறி 10ஆம் வகுப்பு மாணவிகள் 17 பேருக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் ரீதியாக துன்புறுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரின் மீரட் நகர் அருகே தனியார் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் மேலாளர் அந்த பள்ளியில் படித்து வரும் மாணவிகள் 17 பேரை செய்முறை வகுப்புகளுக்காக கடந்த நவம்பர் 20ஆம் தேதியன்று பள்ளிக்கு வரவழைத்துள்ளார். அதாவது, மாணவர்களை அழைக்காமல் வெறும் மாணவிகளுக்கு மட்டும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்படி பள்ளிக்கு வந்த மாணவிகளை, பள்ளியின் மேலாளர் செய்முறை வகுப்புகளுக்காக வேறு ஒரு பள்ளிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு சென்ற போது மாணவிகளுக்கு கிச்சடி உணவு வழங்கப்பட்டுள்ளது. அந்த உணவில் மயக்க மருந்து கலந்திருந்ததால் அதனை சாப்பிட்ட மாணவிகள் மயக்கம் அடைந்திருக்கின்றனர்.

மாணவிகள் சார்ந்த பள்ளியின் மேலாளரும், அவர்கள் சென்ற பள்ளியின் மேலாளர் இருவரும் சேர்ந்து மயங்கிக் கிடந்த மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருக்கின்றனர். மேலும் மயக்கம் தெளிந்த மாணவிகளிடம் இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது மீறினால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டி மறுநாள் காலையில் தான் மாணவிகளை வீடுகளுக்கு அனுப்பியுள்ளனர்..
rape

ஒரு சில மாணவிகள் மிரட்டலுக்கு பயந்த நிலையில் சில மாணவிகள் தங்களின் பெற்றோரிடம் நடந்தது குறித்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாணவிகளின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இருப்பினும் குறிப்பிட்ட இரு பள்ளி நிர்வாகத்தினரின் உள்ளூர் செல்வாக்கு காரணமாக போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து 17 மாணவிகளுக்கு நடந்த பாலியல் கொடூரம் குறித்த தகவல் மாவட்ட எஸ்.பிக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் இந்த கொடூரம் வெளியே வந்து மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த பள்ளி நிர்வாகிகள் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் தலைமறைவான நிலையில், ஒருவரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இச்சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளனர். இந்த கொடூரம் நடந்து 17 நாட்களுக்குப் பிறகு, உள்ளூர் பாஜக எம்எல்ஏ பிரமோத் உத்வால் தலையிட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டபோது இந்த விஷயம் இறுதியாக வெளிச்சத்திற்கு வந்தது.

newstm.in


Tags:
Next Story
Share it