கோபம் தீமைகளை அழிக்கும்... கர்மா தொடங்குகிறது... காளியாக புது அவதாரம் எடுத்த வனிதா!!
கோபம் தீமைகளை அழிக்கும்... கர்மா தொடங்குகிறது... காளியாக புது அவதாரம் எடுத்த வனிதா!!

தமிழ் திரையுலகில் கடந்த 1995-ம் ஆண்டு வெளிவந்த சந்திரலேகா படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக வனிதா விஜயகுமார் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் தமிழ்நாட்டில் மிக பிரபலமானார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை அடுத்து வனிதா விஜயகுமாருக்கு அடுத்தடுத்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டது. குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலை வென்றார்.
தற்போது விஜய் டிவியில் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று கலக்கி வருகிறார். அதோடு, வனிதா விஜயகுமார் சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார். சமூக ஊடகங்களில் அவர் என்ன பதிவிட்டாலும் பெரிய அளவில் வரைலாகிவிடும்.
இந்த சூழலில்தான், வனிதா காளி மேக்அப்பில் எடுத்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

