தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணம் அனிரூத் தான்.. பகீர் கிளப்பும் பிரபல நடிகர் !!

தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணம் அனிரூத் தான்.. பகீர் கிளப்பும் பிரபல நடிகர் !!

தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணம் அனிரூத் தான்.. பகீர் கிளப்பும் பிரபல நடிகர் !!
X

தமிழகத்தில் இப்போது பெரும் ஹாட் டாபிக் என்றால் அது தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதி பிரிவு தான். காதலித்து திருமணம் செய்து 18 ஆண்டுகள் ஆன நிலையில் தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிய முடிவு செய்துள்ளனர். அவர்களின் இரண்டு மகன்களும் ஐஸ்வர்யாவிடமே இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களின் ரசிகர்களும் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே, இருவரின் விவகாரத்துக்கு காரணம் என பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்நிலையில் நடிகரும் திரைப்பட விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் இருவரின் விவாகரத்து குறித்து வீடியோ ஒன்றில் பல திடுக்கிடும் தகவல்களை கூறி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்துக்கு காரணம் அனிரூத் தான் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

pailwan ranganathan

பயில்வான் ரங்கநாதன் கூறியிருப்பதாவது, இசை அமைப்பாளர் அனிருத் ஐஸ்வர்யாவுக்கு முறைப்பையன். திருமணத்திற்கு முன்பே ஐஸ்வர்யா, அனிருத்துடன் தொடர்பில் இருந்தார். ஐஸ்வர்யாவும், அனிருத்தும் கட்டிப் பிடித்த போட்டோக்கள் மற்றும் முத்தம் கொடுத்துக் கொண்ட போட்டோக்கள் வெளியானது.

இது ஆரம்பத்தில் விளையாட்டாக, உறவுக்கார பையன் என்று தான் நினைத்திருந்தார்கள். அதற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது. இதனை தனுஷ் கண்டித்த போதும் ஐஸ்வர்யாவும் அனிருத்தும் கண்டுகொள்ளவில்லை. ஐஸ்வர்யா அனிருத் இடையேயான நெருக்கம் அதிகரித்ததால் தனுஷ் மற்றும் அனிருத் இடையான உறவில் விரிசல் ஏற்பட்டது.

pailwan ranganathan

இதனால் சமீப காலமாகவே அனிருத்தும் தனுசும் பேசிக்கொள்ளவில்லை. தனுஷ் சமீப காலமாய் மதுவுக்கு அடிமையாகி விட்டார். சில நடிகைகளுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதனால்தான் இருவக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஐஸ்வர்யா தனுஷின் குடும்பத்தினருடன் அட்டாச்டாக இல்லை. தனுஷின் அப்பா அம்மாவை ஐஸ்வர்யா அத்தை மாமா என அழைத்ததேயில்லை.

pailwan ranganathan

தனுஷின் குல தெய்வ கோவிலுக்கு செல்வதையும் புறக்கணித்துள்ளார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா ஒரு நல்ல மனைவியாக இல்லாமல், எப்போதும் அப்பா அப்பா என்றே கூறி, அப்பா வீட்டிலேயே இருந்துள்ளார். தனுஷ் கடன் பட்ட போதும் ரஜினிகாந்த் உதவவில்லை என்றும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். பயில்வான ரங்கநாதனின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it