அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரத போராட்டம்.. இந்த முறை ஊழலுக்கு எதிராக அல்ல !!
அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரத போராட்டம்.. இந்த முறை ஊழலுக்கு எதிராக அல்ல !!

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத புதிய திட்டம் ஒன்றை மகாராஷ்டிரா அரசு கொண்டுவந்துள்ளது. அதாவது, மகாராஷ்டிரா மாநிலத்தில் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் வகை மதுவை விற்பனை செய்ய அனுமதி அளித்து புதிய சட்டத்தை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, 1,000 சதுர அடிக்கும் மேல் பரப்பளவு கொண்ட சூப்பர் மார்க்கெட்களில் ஒயின் விற்பனை செய்யலாம்.

இதனையடுத்து, சூப்பர் மார்க்கெட்களில் பழரசம் மூலம் தயாரிக்கப்படும் ஒயின் விற்பனை செய்ய அம்மாநில அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். இதற்கு ஆண்டுக்கு ரூ.5,000 கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், மகாராஷ்டிர அரசின் ஒயின் விற்பனை செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, முடிவை திரும்ப பெறாவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தெரிவித்து இருந்தார்.

சூப்பர் மார்க்கெட் மூலம் மது விற்கும் மகாராஷ்டிர அரசின் முடிவுக்கு எதிராக பிப்ரவரி 14 முதல் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் நடத்தவிருப்பதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் அன்னா ஹசாரே முடிவையும் பலரும் விமர்சித்து வருகின்றனர். அன்னா ஹசாரே போராட்டம் நடத்த இதைவிட பெரிய அளவில் பிரச்சனைகள் இந்த நாட்டில் உள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
newstm.in

