அண்ணாத்த பாடல்.. எஸ்பிபி குறித்து ரஜினிகாந்த் உருக்கம் !!

அண்ணாத்த பாடல்.. எஸ்பிபி குறித்து ரஜினிகாந்த் உருக்கம் !!

அண்ணாத்த பாடல்.. எஸ்பிபி குறித்து ரஜினிகாந்த் உருக்கம் !!
X

என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார், என அண்ணாத்த பாடல் வெளியான நிலையில் ரஜினிகாந்த் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'அண்ணாத்த’ திரைப்படத்தில் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல் மாலை 6 மணிக்கு வெளியானது. விஸ்வாசம் படத்திற்கு பின் இயக்குநர் சிவா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இப்பாடல் யூடியூப்பில் வெளியான சில நிமிடங்களிலேயே அதனை பார்த்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

annaththa

இந்த நிலையில், எஸ்பிபி தனது மறைவுக்கு முன்பாக பாடிய கடைசி பாடல் என்ற பெருமையையும் இப்பாடல் பெற்றுள்ளது. இந்தநிலையில், இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் உருக்காகமாக பதிவிட்டுள்ளார்.

annaththa

ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில், 45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார், என கூறியுள்ளார்.


newstm.in

Tags:
Next Story
Share it