அண்ணாத்த-யின் 'மருதாணி' பாடல் வெளியீடு.. பழைய நினைவுகளுடன் ஆட்டம் போடும் ரஜினி !
அண்ணாத்த-யின் 'மருதாணி' பாடல் வெளியீடு.. பழைய நினைவுகளுடன் ஆட்டம் போடும் ரஜினி !

அண்ணாத்த படத்தின் மூன்றாவது சிங்கிளான ‘மருதாணி’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

வரும் தீபாவளி திருநாள் அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ திரைப்படம். இந்நிலையில், இந்தப் படத்தின் மூன்றாவது பாடலான ‘மருதாணி’ தற்போது லிரிக்கல் வீடியோவாக வெளியிட்டுள்ளது படக்குழு. லிரிக்கல் வீடியோ என்றாலும் சில நொடிகள் ரஜினி பாடுவது போல் காட்சிகள் வருகின்றன.
முன்னதாக அண்ணத்த படத்தில் இடம்பெற்றுள்ள, ‘அண்ணாத்த அண்ணாத்த’, ‘சாரல் காற்றே’ ஆகிய பாடல்களும், படத்தின் டீசரும் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் படத்தின் மூன்றாவது சிங்கிளான ‘மருதாணி’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. அதன்படி தற்போது அந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பாடகர்கள் நாகாஸ் அசிஸ், ஆண்டனி தாசன், வந்தனா ஸ்ரீனிவாசன் ஆகியோர் பாடியுள்ளனர்.
newstm.in

