மீண்டும் விறுவிறுப்பாக தொடங்கும் அண்ணாத்த ஷூட்டிங்- தேதி குறிச்சாச்சு...!!

மீண்டும் விறுவிறுப்பாக தொடங்கும் அண்ணாத்த ஷூட்டிங்- தேதி குறிச்சாச்சு...!!

மீண்டும் விறுவிறுப்பாக தொடங்கும் அண்ணாத்த ஷூட்டிங்- தேதி குறிச்சாச்சு...!!
X

சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்த பிறகு ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாகவே படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்படவுள்ளன.

சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகி வரும் படம் ‘அண்ணாத்த’. இதில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஷ், ஜாக்கி ஷெராஃப், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். கொரோனா பிரச்னை காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. நாடு முழுவதும் அன்லாக் தொடங்கியதை தொடர்ந்து, மீண்டும் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பு எடுத்தன.

இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த ‘அண்ணாத்த’ ஷூட்டிங்கில், படக்குழு 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மீண்டும் படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன. எனினும், ரஜினிகாந்த் உள்ளிட்ட மற்ற நடிகர் நடிகையர்கள் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. அண்ணாத்த ஷூட்டிங்கில் தொற்றுக்கு ஆளான அனைவரும் குணமடைந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் இயக்குநர் சிவா, நடிகர் ரஜினிகாந்தை போயஸ்தோட்ட இல்லத்தில் வைத்து சந்தித்தார். மீண்டும் படப்பிடிப்பு துவங்கப்படுவதற்கான ஆயத்தப் பணிகளை குறித்து அவர்கள் இருவரும் பேசினர். அதை தொடர்ந்து படத்தை மீண்டும் துவங்குவது குறித்தும், ரிலீஸ் செய்யப்படுவது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

முன்னதாக சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு அண்ணாத்த ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே படப்பிடிப்பை துவங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி மார்ச் 15ம் தேதி முதல் அண்ணாத்த ஷூட்டிங் மீண்டும் துவங்கப்படுகிறது. முதலில் சென்னை ஈ.வி.பி ஃப்லிம் சிட்டியில் நடைபெறுகிறது. அதற்காக பிரமாண்டமான அரங்கு அமைப்பு பணிகள் தற்போது நடந்து வருகின்றன. அதை தொடந்து கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் ஷூட்டிங் நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் ‘அண்ணாத்த’ படத்திற்கு டி. இமான் இசையமைத்து வருகிறார். முழுக்க கிராமத்து கதையாக தயாராகி வரும் இந்த படம் தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்பபை ஏற்படுத்தியுள்ளது.

Tags:
Next Story
Share it