Theme Check

மாணவர்களுக்கு ஆண்டுதோறும் அரசு உதவித்தொகை.. அரிய வாய்ப்பு !

மாணவர்களுக்கு ஆண்டுதோறும் அரசு உதவித்தொகை.. அரிய வாய்ப்பு !

மாணவர்களுக்கு ஆண்டுதோறும் அரசு உதவித்தொகை.. அரிய வாய்ப்பு !
X

தேசிய திறன் தேடல் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் பிஹெச்டி வரையில் உதவி தொகை கிடைக்கும் என்ற திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

அனைவரும் கல்வி கற்கும் வகையிலும், இடையில் பள்ளியைவிட்டு நிற்காமல் படிப்பை தொடரவும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றனர். அந்த வகையில், மத்திய அரசு சார்பில் எடுக்கப்படும் முக்கிய நடவடிக்கையாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. அதாவது, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் இடையில் பள்ளி படிப்பை நிறுத்தி விடாமல் உயர்கல்வி கற்க உதவியாக இருக்கவும், மேல்நிலை கல்வி தடைபடக் கூடாது என்ற நோக்கிலும் ஆண்டுதோறும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

exam student

இந்த தேர்வின் மூலம் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

பத்தாம் வகுப்பு படித்தவர்கள் இந்த தேர்வை எழுதலாம். ஆனால், ஒன்பதாம் வகுப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர்கள் ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் இந்த தேர்வுக்கு பள்ளிக்கூடம் வழியாக விண்ணப்பிக்க முடியும் என்பது வழிமுறை.

exam student

இதில் தேர்ச்சி பெற்றால் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வில் 1,250 ரூபாய் கிடைக்கும். அதைத்தொடர்ந்து இளநிலை படிப்புக்கு 2 ஆயிரம் என்று படிப்புக்கு ஏற்றபடி உதவி தொகை அதிகரிக்கும். அவ்வாறு பிஹெச்டி படிக்கும் வரை உதவித்தொகையை பெறமுடியும். எனவே இதனை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பது அரசின் விருப்பம்.


newstm.in

Next Story
Share it