ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி.. அசத்தும் லோவ்லினா !!
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி.. அசத்தும் லோவ்லினா !!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகளும் பதக்கங்களை குவித்து வருகின்றனர். குறிப்பாக சீனா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் ஆதிகம் செலுத்தி வருகிறது. இந்தியா இதுவரை வெள்ளி பதக்கம் ஒன்று வென்றுள்ளது. பளுதூக்குதலில் மீராபாய் சானு இப்பதக்கத்தை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

அடுத்து வரும் நாட்களில் இந்தியாவுக்கு பதக்கம் சாதகமான சூழல்நிலையிலேயே உள்ளது. இந்த நிலையில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. குத்துச்சண்டை பெண்களுக்கான வெல்டர் (64-69 கிலோ) பிரிவு காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில் 2ஆவது காலிறுதியில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் சீன தைஃபேயின் நின்-சின்-சென்னை எதிர்கொண்டார்.

இதில் லோவ்லினா 4:1 (30-27, 29-28, 28-29, 30-27, 30-27) என அசத்தல் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
அதாவது அரையிறுதி போட்டிகளில் தோல்வியடையும் வீராங்கனைகளுக்கு வெண்கல பதக்கம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

