வானில் மற்றொரு சூப்பர் மூன்.. தெளிவாக தெரிந்த 'ஸ்ட்ராபெரி மூன்' !!
வானில் மற்றொரு சூப்பர் மூன்.. தெளிவாக தெரிந்த 'ஸ்ட்ராபெரி மூன்' !!

2021ஆம் ஆண்டில் வானில் பல அறிய நிகழ்வுகள் நிகழ்ந்து வருகின்றன. அதாவது, சூரிய கிரகணத்தையும், கோடைக்கால சங்கிராந்தியையும் மக்கள் பார்க்க முடிந்தது. பின்னர் ரெட் மூன் உள்பட அடுத்தடுத்து நிகழ்வுகள் ஏற்பட்டன. இந்த நிலையில் தற்போது ஸ்ட்ராபெரி சூப்பர்மூன் நிகழ்வு வானில் தோன்றியுள்ளது.
ஸ்ட்ராபெரி மூன் ஆரஞ்ச் நிறத்தில் இருக்கும் இந்த பெருநிலவு, ஸ்ட்ராபெரி மூன் என்று அழைக்கப்படுகிறது. சந்திரன் தனது சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் வந்த அழகான வானியல் நிகழ்வை, ஒடிசா மாநிலம் புரி நகரில் தெளிவாக காண முடிந்தது. பஞ்சாப், கோவா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஸ்ட்ராபெரி மூன் தெளிவாக தெரிந்தது.
பல மாநிலங்களில் மழை , மேகமூட்டம் காரணமாக நிலவு முழுமையாக தெரியவில்லை. அதேநேரத்தில் இந்த ஆண்டின் கடைசி சூப்பர் மூன் இதுதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியன், பூமி மற்றும் சந்திரன் 180 டிகிரி வரிசையில் வரிசையாக நிற்கின்றது. ஆனால் சந்திரனின் சுற்றுப்பாதை பூமியிலிருந்து சற்று வித்தியாசமாக இருப்பதால் இது பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து 5 டிகிரி விலகி நிற்கிறது. இது பொதுவாக வான வரிசை நிகழும்போது பூமியின் நிழலை விட சற்று அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும் படி நிலைமையை உருவாக்குகிறது. அதாவது சூரியனின் ஒளி பூமியை எதிர்கொள்ளும் சந்திரனின் பக்கத்தை முழுமையாக ஒளிரச் செய்ய முடியும். இதனால் தான் ஸ்ட்ராபெரி மூன் என்ற நிகழ்வு நிகழ்கிறது.
newstm.in

