பாலியல் கொடுமையால் மீண்டும் ஒரு சோகம்..!! தலைமை ஆசிரியருக்கே நடந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி..!!
பாலியல் கொடுமையால் மீண்டும் ஒரு சோகம்..!! தலைமை ஆசிரியருக்கே நடந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி..!!

திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் அருகே பேரளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சத்யா(35) என்பவர் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். சத்யாவுக்கு 7 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் அவருக்கும் அவர் கணவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று மதியம் 12 மணி அளவில் பள்ளியிலேயே விஷமருந்தி உள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தினர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். சத்யா தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இதையடுத்து சத்யாவின் உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த நிலையில், பேரளம் காவல்துறையினர் சந்தேக மரணம் என பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து சத்யாவின் உறவினர்கள் சரஸ்வதி மற்றும் ஆனந்த் கூறும்போது, 15 வருடமாக சத்யா அதே பள்ளியில் பணியாற்றி வருகிறார். பள்ளியில் தாளாளர் சத்யாவுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதனால் சத்யா மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், சம்பவத்தன்று சத்யா பள்ளிக்கு சென்றபோது அவரை பள்ளிக்குள் அனுமதிக்கவில்லை என்றும் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர்.

