Theme Check

தடுப்பூசி போட்டு கொண்டால் ஆப்பிள் AirPods இலவசம்... டீனேஜர்ஸ் குஷி !

தடுப்பூசி போட்டு கொண்டால் ஆப்பிள் AirPods இலவசம்... டீனேஜர்ஸ் குஷி !

தடுப்பூசி போட்டு கொண்டால் ஆப்பிள் AirPods இலவசம்... டீனேஜர்ஸ் குஷி !
X

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல உலக நாடுகள் தீவிரமாக போராடி வருகின்றன. அதனை கட்டுப்படுத்த பல வழிகளில் போராடிய நாடுகள் தற்போது கொரோனாவிலிருந்து தப்பிக்க கேடயமாக தடுப்பூசிகளை தான் நம்புகின்றனர். முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டவர்களை வைரஸ் தாக்கினாலும் அவர்களின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்படாது என்பதை தொடர்ந்து மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஒரு சில நாட்டு மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் நிலையில், அமெரிக்க உட்பட வளர்ந்த நாடுகளில் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் பலர் விருப்பம் இல்லாமல் இருக்கின்றனர்.

இதனால் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட மக்களை ஊக்குவிக்கும் வகையில், அமெரிக்காவின் வாஷிங்டன் நகர அதிகாரிகள் தடுப்பூசி போட்டு கொள்ளும் பதின்ம வயதினருக்கு (டீன் ஏஜ்), விலையுயர்ந்த பரிசுகள் வழங்கப்படும் என்ற வியப்பூட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

apple airpots

அதிக டீனேஜர்ஸ் தடுப்பூசிகளை பெற ஊக்குவிக்கும் பொருட்டு, வாஷிங்டன் டிசி-யின் மேயரான முரியல் பவுசர், முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் டீனேஜர்ஸுக்கு இலவசமாக ஆப்பிள் ஏர்போட்கள் (AirPods) வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள முரியல் பவுசர், கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளும் டீனேஜர்ஸுக்கு இலவச ஆப்பிள் ஏர்போட்கள் வழங்கப்படும் 3 சென்டர்கள் பற்றிய தகவலையும் ஷேர் செய்து உள்ளார். இதன்படி ப்ரூக்லேண்ட் எம்எஸ், சூசா எம்எஸ், ஜான்சன் எம்எஸ் ஆகிய 3 சென்டர்களில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளும் டீன்ஏஜ் வயதினருக்கு விலையுர்ந்த ஆப்பிள் ஏர்போட்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

apple airpots

இது தவிர அவர்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால், அவர்கள் தங்களது முதல் டோஸைப் பெற்ற பிறகு 25,000 டாலர் மதிப்புள்ள ஸ்காலர்ஷிப், ஹெட்போன்ஸ் அல்லது iPad-யும் பெறலாம் என்றும் வாஷிங்டன் டிசி மேயர் முரியல் பவுசர் அறிவித்துள்ளார். 12-17 வயதிற்குட்பட்ட டீனேஜர்கள் மட்டுமே இதற்கு தகுதியுடையவர்கள் என்றும் வாஷிங்டன் மேயர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் 12-17 வயதிற்குட்பட்ட டீனேஜர்கள் தடுப்பூசி முகாம்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.


newstm.in

Tags:
Next Story
Share it