Theme Check

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு!!

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு!!

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு!!
X

தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளுக்கு பிறகு 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மே மாதம் நேரடி பொதுத்தேர்வு நடைபெற்றது. அதன்படி, கடந்த மாதம் 5-ம் தேதி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த மாதம் 20-ம் தேதி 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன்.

இதனைத் தொடர்ந்து, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர ஜூன் 22-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது.

application

தமிழ்நாட்டில் 163 கல்லூரிகளில் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. 2022-23-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கியது. பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்சி. உள்பட இளங்கலை படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

ஏற்கனவே அறிவித்தபடி, அரசு கலைக் கல்லூரிகளில் சேர நேற்று கடைசி நாள் ஆகும். அதன்படி, நேற்று மாலை நேர தகவலின் அடிப்படையில், 3 லட்சத்து 65 ஆயிரத்து 40 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இவர்களில், 3 லட்சத்து ஆயிரத்து 274 பேர் விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்திருப்பதாகவும், இதில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 332 பேர் கட்டணங்களை செலுத்தியிருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.

arts-college

இந்நிலையில், பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேருவதற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க நேற்றுடன் அவகாசம் நிறைவடைந்தது. ஆனால் இன்னும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it