Theme Check

இன்று மாலை விண்ணப்ப பதிவு தொடக்கம்..!

இன்று மாலை விண்ணப்ப பதிவு தொடக்கம்..!

இன்று மாலை விண்ணப்ப பதிவு தொடக்கம்..!
X

செப்டம்பர் 12ம் தேதி நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மாலை 5 மணிக்கு அதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளதாவது; “கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் சமூக இடைவெளியைப் பின்பற்றி நீட் தேர்வு நடக்கும். இதற்காக, தேர்வு நடத்தப்படும் நகரங்களின் எண்ணிக்கை 155ல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்படும்.

கடந்த ஆண்டில் 3,862 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன; இந்த எண்ணிக்கையும் இந்த ஆண்டு அதிகரிக்கும். தேர்வுக்கு வரும் அனைத்து மாணவர்களுக்கும் முக கவசம் வழங்கப்படும். தேர்வு மையத்தில் நுழையவும், வெளியேறவும் நெரிசல் ஏற்படாத வகையில், பல்வேறு வகை நேர அட்டவணை பின்பற்றப்படும்.

கொரோனா வழிகாட்டலை பின்பற்றி, எந்த ஒரு தொடர்பும் ஏற்படாத பதிவு முறை, தேர்வு மையங்களில் முறையான கிருமி நீக்கம், சமூக இடைவெளியுடன் கூடிய இருக்கை அமைப்பு போன்றவையும் நீட் தேர்வில் உறுதி செய்யப்படும்.

தேர்வில் பங்கேற்க, ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று மாலை 5 மணிக்கு துவங்கும். கூடுதல் விவரங்களை, www.nta.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.
Tags:
Next Story
Share it