Theme Check

கலை கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!

கலை கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!

கலை கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!
X

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 27ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் மாற்றம் செய்யப்பட்டு இன்று முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tngasa.in என்கிற இணையதள பக்கத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. மொத்தம் 8,06,277 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 93.76.

college

இந்த நிலையில், 12 ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்த மாணவர்கள் அரசு கலை அறிவியல் கல்லுரிகளில் சேர இன்று முதல் இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என உயர்க்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பி.., பி.காம்., பிபிஏ,பிசிஏ உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.in, www/tngasa.org என்ற இணையதள முகவரிகளில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜூலை 7 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

newstm.in


Next Story
Share it