தமிழகத்தில் 5,000 சிறப்பாசிரியர் நியமனம்.. இவர்களுக்கு முன்னுரிமை வழங்க முடிவு..!
தமிழகத்தில் 5,000 சிறப்பாசிரியர் நியமனம்.. இவர்களுக்கு முன்னுரிமை வழங்க முடிவு..!

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த 2018-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், “வரும் கல்வியாண்டு (2022 - 20223) முதல் மழலையர் வகுப்புகள் அங்கன்வாடி மையங்களில் நடத்தப்படும். அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் கிடையாது” என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ‘அரசின் இந்த முடிவை திரும்ப பெற வேண்டும்’ என்று பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தினர்.
பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால், ‘அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவையான இடங்களில் நியமிக்கப்படுவர்’ என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு பாடம் எடுக்க 5,000 சிறப்பாசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி, 2,381 அங்கன்வாடி மையங்களில் முதற்கட்டமாக 2,500 சிறப்பாசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
அதனால் டிஇஇ ஆசிரியர் பயிற்சி வகுப்பு (DEE - Teacher Training courses) முடித்த பெண்களுக்கு சிறப்பாசிரியர் நியமனத்தில் முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

