Theme Check

100 கோடி இணைய பயனர்களுக்கு சேவை செய்வதே இலக்கு : AppyHigh நிறுவனம்!!

100 கோடி இணைய பயனர்களுக்கு சேவை செய்வதே இலக்கு : AppyHigh நிறுவனம்!!

100 கோடி இணைய பயனர்களுக்கு சேவை செய்வதே இலக்கு : AppyHigh நிறுவனம்!!
X

குர்கானில் செயல்பட்டு வரும் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான அப்பிஹை (AppyHigh) அடுத்த தலைமுறைக்கான பயன்பாட்டு மற்றும் உள்ளடக்க தளங்களை உருவாக்குகிறது.

இதனை இளம் தொழில்முனைவோர்களான வீனஸ் தூரியா, அனீஸ் ரயன்சா ஆகிய இருவரும் நிர்வகித்து வருகின்றனர். 2021ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள தலைசிறந்த 10 தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக அப்பிஹை நிறுவனத்தை ஆப் அன்னி (App Annie) நிறுவனம் அங்கீகரித்துள்ளது.

அப்பிஹை (AppyHigh) என்பது ஒரு இணைய மொபைல் தொழில்நுட்ப நிறுவனம். இது நாள்தோறும் லட்சக்கணக்கான பயனர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு தயாரிப்புகளை உருவாக்கி வருகிறது. இப்போது கணினியைவிட பலரும் அதிகமாக ஸ்மார்ட் போன்களை தான் இணைய பயன்பாட்டிற்கு உபயோகிக்கின்றனர்.

AHFounders

முதல் தலைமுறை இணைய பயன்பாட்டாளர்கள் கூட மொபைல் மூலம் தான் இணையத்திற்குள் நுழைகின்றனர். இந்நிலையில் அப்பிஹை (AppyHigh) பயனர்களை கவரும் வகையில் ஏராளமான செயலிகளை உருவாக்கியுள்ளது. அந்த வகையில் மாஸ்ட்ர் ஃபீட் (Master Feed), ஷேர் கரோ இந்தியா (Share Karo India), மெசஞ்சர் கோ (Messenger Go) உள்ளிட்ட செயலிகளை உருவாக்கியுள்ளது.

அவற்றை கோடிக்கணக்கான பயனர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். தொழில்நுட்பத்திற்கும், மக்களுக்கும் இடையேயான இடைவெளியை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அப்பிஹை (AppyHigh) நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

appyhigh

அதே போல் ஆப் லாக், கிளீனர் கோ, ஸ்கேனர் கோ உள்ளிட்ட 20க்கும் அதிகமான செயலிகள் அப்பிஹை (AppyHigh) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. ரெக்கிட் நிறுனத்தில் பணியாற்றும் போது சந்தித்துக் கொண்ட அனீஷ் மற்றும் வீனஸ் இணைந்து 2014ஆம் ஆண்டு அப்பிஹை (AppyHigh) நிறுனத்திற்கான விதையை விதைத்தனர்.

ருடுகோ என்ற கேப் புக்கிங் ஆப்-ஐ தொடங்கி அதன்பிறகு 2018இல் அப்பிஹை (AppyHigh) நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்தனர். தற்போது பல விருதுகள் மற்றும் அங்கீகாரங்களுடன் தலைசிறந்த குழுவை கொண்டு அப்பிஹை (AppyHigh) நிறுவனத்தை நிர்வகித்து வருகின்றனர். https://appyhigh.com/ என்ற இணைய முகவரியில் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் இடம் பெற்றுள்ளன.

newstm.in

Next Story
Share it