ஏப்ரல் 25 ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு!
ஏப்ரல் 25 ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு!

நடப்பாண்டிற்கான ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா ஏப்ரல் 25ம்தேதி நடைபெற இருக்கிறது. இந்த விழாவை நடிகை பிரியங்கா சோப்ராவும் அவருடைய கணவரான பாடகர் நிக் ஜோனாசும் தொகுத்து வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 93வது ஆஸ்கர் விருதுக்கான படங்களின் பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 முதல் 8.30 மணி வரை ஆஸ்கர் நிகழ்ச்சிகள் நடைபெறும். கொரோனா காரணமாக குறைந்த எண்ணிக்கையிலேயே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். ஆஸ்கர் நிகழ்ச்சிகள் அனைத்தும் சமூகவலைதளங்கள் மூலம் நேரலையில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
Next Story

