சாமி சிலைக்கு முகக்கவசம் அணிவித்த அர்ச்சகர் - கொரோனா வரக்கூடாதாம்!

இந்தியா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா அச்சுறுத்தி வருகிறது. கடவுள் தான் மக்களை காப்பாற்ற வேண்டும் என எல்லோரும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் வேளையில், கடவுளுக்கே ஒரு அர்ச்சகர் முகக்கவசம் அணிவித்துள்ளார். வாரணாசி பிரகலதேஸ்வரர் கோவில் அர்ச்சகர் கிருஷ்ண ஆனந்த் பாண்டே தான் இப்படி செய்துள்ளார்.

X

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், வாரணாசி பிரகலதேஸ்வரர் கோவிலில் உள்ள விஸ்வநாதர் சிலைக்கு முகக்கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா அச்சுறுத்தி வருகிறது. கடவுள் தான் மக்களை காப்பாற்ற வேண்டும் என எல்லோரும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் வேளையில், கடவுளுக்கே ஒரு அர்ச்சகர் முகக்கவசம் அணிவித்துள்ளார். வாரணாசி பிரகலதேஸ்வரர் கோவில் அர்ச்சகர் கிருஷ்ண ஆனந்த் பாண்டே தான் இப்படி செய்துள்ளார்.

சாமி சிலைக்கு முகக்கவசம் அணிவித்த அர்ச்சகர் - கொரோனா வரக்கூடாதாம்!
வெயில் காலத்தில் ஏசி, பேன் போடுவது போலவும், குளிர் காலத்தில் துணிகளை போர்த்துவது போலவும் தான் தற்போது முகக்கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். சாமி சிலையை தொட்டு வணங்குவதால், வைரஸ் மற்றவர்களுக்கு பரவி பாதிப்படைவதை தடுக்க, சிலைகளை தொட்டு வணங்க வேண்டாம் என பொதுமக்களிடம் வலியுறுத்தி உள்ளதாக அவர் கூறினார். கோவிலில் பக்தர்களும் முகக்கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.

newstm.in

Tags:
Next Story
Share it