சென்னை பள்ளி மாணவர்களே தயாரா? - ஆண்டு இறுதி தேர்வு தேதி அறிவிப்பு !!
சென்னை பள்ளி மாணவர்களே தயாரா? - ஆண்டு இறுதி தேர்வு தேதி அறிவிப்பு !!

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்பட்டன. பின்னர் தொற்று குறைந்ததையடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பள்ளிகள்-கல்லூரிகள் மட்டும் திறக்கப்படாமலே இருந்தன.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து, 17 மாதங்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளி, கல்லூர்கள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் கடந்த நவம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன.

இந்நிலையில், பொதுத்தேர்வு நிச்சயம் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. அதேபோல, 6 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் மே 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலும் பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 6-9 ஆம் வகுப்பு வரை மே 5 முதல் 12ஆம் தேதி வரை ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும். 6,7 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத்தேர்வு, 8,9 ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in

