Theme Check

மக்களே தயாரா? - தென்மேற்கு பருவமழை தொடங்கியது.. இருக்கு சம்பவம் !

மக்களே தயாரா? - தென்மேற்கு பருவமழை தொடங்கியது.. இருக்கு சம்பவம் !

மக்களே தயாரா? - தென்மேற்கு பருவமழை தொடங்கியது.. இருக்கு சம்பவம் !
X

தென்மேற்கு பருவமழை இரண்டுநாள் தாமதத்திற்கு பின் இன்று தொடங்கியது.

மகாராஷ்டிராவுக்கு அதிக மழை கொடுப்பது தென்மேற்குக பருவமழை தான். ஆண்டுதோறும் எவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும் பருவமழை காலத்தில் மும்பை உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கும். ரயில் தண்டவாளங்கள் மூழ்கும், சாலைகள் குளங்கள்போன்று காணப்படும் என்பதால் போக்குவரத்து அடியாகும்.

rain

இதனால் பருவமழை என்றால் மகாராஷ்டிராவில் மக்களும் அதற்குஏற்ப திட்டமிடுவர். இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதன் வழக்கமான தொடக்கத்தை விட இரண்டு நாட்கள் தாமதமாக இன்று தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மகாராஷ்டிராவில் வழக்கமாக பருவமழை வழக்கமாக ஜூன் 9 ஆம் தேதி கொங்கனில் வந்து சேரும்.

ஆனால், தற்போது இரு நாட்கள் தாமதத்துடன், தென்மேற்கு பருவமழை கொங்கன் மற்றும் மத்திய மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் தொடங்கியுள்ளது. இதனால், கொங்கனின் சில பகுதிகளில் மழை பெய்யும் என்றும், கனமழை பெய்யக்கூடிய பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை மைய அதிகாரி தெரிவித்தார்.

rain

மேலும், நிலைமைகள் சாதகமாக இருந்தால், பருவமழை மேலும் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் கூறினார்

newstm.in

Tags:
Next Story
Share it