ரஜினி ரசிகர்களே ரெடியா? இன்று மாலை வெளியாகிறது ‘அண்ணாத்த’ படத்தின் முதல் சிங்கிள்...
ரஜினி ரசிகர்களே ரெடியா? இன்று மாலை வெளியாகிறது ‘அண்ணாத்த’ படத்தின் முதல் சிங்கிள்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இமான் முதல் முதலாக ரஜினி படத்திற்கு இசை அமைத்துள்ளார். நயன் தாராவுடன் மீனா குஷ்பூ என மூன்று நாயகிகள் நடிக்கும் இந்தப் படத்தில் சூரி, சதீஷ் உள்ளிட்ட பல காமெடி நடிகர்களும் நடித்து வருகின்றனர்.
கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி காலமானார். இவர் கடைசியாக அண்ணாத்த படத்துக்கான டி. இமான் இசையில் ஒரு பாடலை பாடி இருந்தார்.அந்த பாடலை அவர் பாடிய போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டு அண்ணாத்த படக்குழு எஸ்.பி.பி-க்கு அஞ்சலி செலுத்தியது. மேலும் 'அண்ணாத்த' படத்திற்காக எனது இசையில் எஸ்.பி.பி பாடியது ஆசிர்வாதம்' என்று டி.இமான் குறிப்பிட்டார்.
இந்நிலையில் ‘அண்ணாத்த’ படத்தின் முதல் சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது..எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவதற்கு முன்பு கடைசியாக ‘அண்ணாத்த’ படத்தில் பாடியுள்ளார்.
To the combo that gave us goosebumps every single time!
— Sun Pictures (@sunpictures) October 4, 2021
Thiru #SPB - Superstar Rajinikanth ❤#AnnaattheFirstSingle releasing Today @ 6PM@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @Viveka_Lyrics @AntonyLRuben @vetrivisuals #PremRakshith #Annaatthe pic.twitter.com/LAwa1uRk2e

