Theme Check

ஈரோட்டில் தீவிரவாதிகள் பதுங்களா? - 2 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் !

ஈரோட்டில் தீவிரவாதிகள் பதுங்களா? - 2 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் !

ஈரோட்டில் தீவிரவாதிகள் பதுங்களா? - 2 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் !
X

ஈரோட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக என்.ஐ.ஏ என அழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமை பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சென்னையில் இருந்து 3 பேர் கொண்ட குழுவினர் ஈரோடு விரைந்து வந்தனர். பின்னர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தங்களது விசாரணையை தொடங்கினர்.

இதைத்தொடர்ந்து மாலை 6 மணி அளவில் ஈரோடு போலீசாருடன் சேர்ந்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள், தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்பட்ட ஈரோடு மாணிக்கம்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்று அதிரடியாக சோதனையிட்டனர்.

அப்போது அந்த வீட்டில் 5 பேர் ஒரு குடும்பமாக வசித்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அங்கு இருந்த 2 பேரை மட்டும் ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விசாரணையை தீவிரபடுத்தினர். மேலும் வீட்டில் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்பட்டு வந்த ஸ்மார்ட் போன், லேப்டாப், டைரிகள், சிம்கார்டுகள், வங்கி பாஸ் புக் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

fd

இதனால் மாணிக்கம் பாளையம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறும்போது, பெங்களூர் திலக் நகர் பகுதியில் அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த அக்தர் உசேன் லஸ்கர் என்பவரை கடந்த 24ஆம் தேதி கைது செய்து விசாரித்தனர். அவர் கொடுத்த தகவல் அடிப்படையில் சேலத்தில் பதுங்கி இருந்த அப்துல் அலி ஜூபா என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இவர் அளித்த தகவலின் அடிப்படையில் ஈரோடு மாணிக்கம் பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்' என்றனர். எனினும் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியதால் அவர்கள் குறித்த தகவல்களை போலீசார் வெளியிடவில்லை. விரிவான விசாரணைக்கு பிறகு முழு தகவல்களும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி நாளை சென்னை வரவுள்ளார். விரைவில் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகித்து இருவரை பிடித்து விசாரணை நடத்தும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it