மாணவர்களே தயாரா? JEE மெயின் தேர்வுகள் தேதி வெளியீடு- 2 கட்டங்களாக நடைபெறுகிறது !!
மாணவர்களே தயாரா? JEE மெயின் தேர்வுகள் தேதி வெளியீடு- 2 கட்டங்களாக நடைபெறுகிறது !!

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் மாதம் நடைபெறும் ஜே.இ.இ மெயின் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில், ஜேஇஇ (JEE) மெயின் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. JEE மெயின் தேர்வுகளின் 3, 4 ஆம் கட்ட தேர்வுகள் ஜூலை 20-25 மற்றும் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வான ஜேஇஇ மெயின் 2021 தோ்வு இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கு கொரோனா தான் காரணம் என்பது அனைவரும் அறிந்தது. ஜேஇஇ மெயின் தேர்வு ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக பிப்ரவரி மாதமும் அதைத் தொடா்ந்து மார்ச் மாதத்திலும் தோ்வு நடைபெற்றது. ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த மெயின் தேர்வு மே 24 முதல் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த ஜேஇஇ மெயின் தேர்வு (JEE Main (April) exam date) ஜூலை 20 முதல் ஜூலை 25 வரை நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
ஜே.இ.இ மெயின் தேர்வின் மூன்றாம் கட்ட (ஏப்ரல்) தேர்வு ஜூலை 20 முதல் ஜூலை 25 வரை நடைபெறும் என்றும், நான்காம் கட்ட (மே) தேர்வு (JEE Main (May) exam date) ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார். எந்தவொரு மாணவர்களும் இதற்கு முன்னர் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை என்றால், மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.
newstm.in

