Theme Check

மாணவர்களே தயாரா? - இன்று முதல் கலந்தாய்வு தொடக்கம்

மாணவர்களே தயாரா? - இன்று முதல் கலந்தாய்வு தொடக்கம்

மாணவர்களே தயாரா? - இன்று முதல் கலந்தாய்வு தொடக்கம்
X

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 கல்லூரிகள் உள்பட மொத்தம், 37 அரசு மருத்துவ கல்லூரிகளும், இரண்டு அரசு பல் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டுக்கு 6,999 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதேபோல், இரண்டு அரசு மற்றும் சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில், மாநில ஒதுக்கீட்டுக்கு 1,930 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

medical counsiling

இதைத் தவிர சுயநிதி கல்லூரிகளில் நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 1,145 எம்பிபிஎஸ் இடங்களும், 635 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. அந்த இடங்களுக்கான தரவரிசை பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.

முதல்நாள், சிறப்பு பிரிவில் மாற்றுத்திறனாளிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டுப் பிரிவினருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு சென்னை ஓமந்தூராாா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் இன்று நடைபெற உள்ளது.

medical counsiling

அதற்கு அடுத்த இரண்டு நாட்கள், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான, 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான நேரடி கலந்தாய்வு நடைபெறும். பின்னா் வரும் 30-ஆம் தேதி முதல் பொதுக் கலந்தாய்வு மாணவா் சோ்க்கை இணையதளங்கள் வாயிலாக நடைபெற உள்ளது.

newstm.in

Next Story
Share it