Theme Check

கேஸ் வாடிக்கையாளரா நீங்கள்? உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி

கேஸ் வாடிக்கையாளரா நீங்கள்? உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி

கேஸ் வாடிக்கையாளரா நீங்கள்? உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி
X

ஏற்கனவே கேஸ் ஏஜென்சியின் தொலைபேசி எண்ணுக்கு கால் செய்து அதில் வரும் குரலின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப சிலிண்டர் புக் செய்வது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இப்போது புதிதாக வாட்ஸ் அப் மூலம் புக் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி, நீங்கள் இண்டேன் கேஸ் வாடிக்கையாளராக இருந்தால் 77189 55555 என்ற எண்ணை அழைத்து சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். அல்லது 75888 88824 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு REFILL என டைப் செய்து அனுப்பி சிலிண்டரை புக் செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் பதிவு செய்த எண்ணில் இருந்து வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்ப வேண்டும்.

ஹெச்.பி கேஸ் வாடிக்கையாளராக இருந்தால் 92222 01122 என்ற எண்ணுக்கு BOOK என டைப் செய்து வாட்ஸ் அப்பில் அனுப்ப வேண்டும். அப்போது முன்பதிவு தொடர்பான தகவல்கள் கேட்கப்படும். அந்த தகவல்களை உள்ளிட்ட சிலிண்டர் புக் செய்யலாம்.

பாரத் கேஸ் வாடிக்கையாளராக இருந்தால் 1800224344 என்ற எண்ணுக்கு BOOK அல்லது 1 என டைப் செய்து வாட்ஸ் அப்பில் அனுப்ப வேண்டும். அதற்கு பிறகு உங்கள் புக்கிங் உறுதிப்படுத்தப்பட்டு உங்கள் மொபைலுக்கு மெசேஜ் வந்துவிடும்.

Tags:
Next Story
Share it