Theme Check

நீங்க விளையாட்டு வீரரா..?: உங்களைத்தான் தேடுது ரயில்வே..!

நீங்க விளையாட்டு வீரரா..?: உங்களைத்தான் தேடுது ரயில்வே..!

நீங்க விளையாட்டு வீரரா..?: உங்களைத்தான் தேடுது ரயில்வே..!
X

கர்நாடகம் மாநிலம் ஹூப்ளியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென்மேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள கிளார்க் மற்றும் தட்டச்சர் பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண். SWR/P-HQ/Sports(OA)2021-22
பணி: Clerk Cum-Typist (Sports Quota)
காலியிடங்கள்: 21
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி அல்லது இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விளையாட்டுத் தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள ஏதாவது ஒன்றில் சர்வதேச, ஆசிய, தெற்காசிய போட்டிகள் போன்ற ஏதாவது ஒரு போட்டியில் பங்குபெற்று குறைந்தபட்சம் மூன்றாவது இடத்தையாவது பெற்றிருக்க வேண்டும். 14.01.2019-க்கு பின்னரான காலகட்டத்தில் பெற்ற சாதனைகள் மட்டுமே கணக்கிடப்படும். சம்பந்தப்பட்ட விளையாட்டோடு தற்போதும் தொடர்பில் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டு தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. பெண்கள், எஸ்சி, எஸ்டி, சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.rrchubli.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.03.2022
மேலும் விவரங்கள் அறிய: www.rrchubli.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Next Story
Share it