Theme Check

லோன் ஆப் மூலம் கடன் பெறுகிறீர்களா? – உங்களுக்கான எச்சரிக்கை!!

லோன் ஆப் மூலம் கடன் பெறுகிறீர்களா? – உங்களுக்கான எச்சரிக்கை!!

லோன் ஆப் மூலம் கடன் பெறுகிறீர்களா? – உங்களுக்கான எச்சரிக்கை!!
X

பொதுமக்கள் அவசர தேவைக்காகவோ அல்லது வேறு ஏதும் காரணங்களுக்காகவோ குறிப்பிட்ட சில செயலிகளின் மூலம் லோன் பெற வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், லோன் செயலிகளின் மூலம் கடன் வாங்கும் போது. கடன் பெறுபவருடைய செல்போனில் இருக்கும் கான்டக்ட் எண்கள், போட்டோ, தனிப்பட்ட விவரங்களை அந்த செயலிகள் சேகரித்து வைத்துக் கொள்ளப்படுகின்றன.

கடன் வாங்கும் தொகையில் ஏறக்குறைய 30 சதவீதம் பணத்தை பிராசஸிங் பீஸ் ஆக பிடித்துக்கொண்டு மீதமுள்ள பணம் லோன் வாங்குபவரின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.

loan fraud

உதாரணமாக ரூ.5.000 லோன் அப்ளை செய்யும்போது, ரூ.3500 மட்டுமே லோன் பெறுபவருக்கு கிடைக்கும். ரூ.1500 பிராசஸிங் பீஸாக எடுத்துக்கொள்ளப்படும். இந்த பணத்தை திருப்பி கட்டுவதற்கு 7 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படும்.

அதற்குள் ரூ.5000 பணத்தையும் திருப்பி செலுத்த வேண்டும் தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.200 முதல் ரூ.500 வரை வட்டி ஏறிக் கொண்டேசெல்லும். பத்து நாட்கள் வரை பணம் திருப்பி செலுத்தாதவர்களுக்கு போன் மூலம் மிரட்டல்கள் வர துவங்கும்.

shankar

இவ்வாறாக லோன் பெறுவோரின் நண்பர்கள், உறவினர்களின் செல்போனுக்கு கடன் பெற்ற நபர் குறித்து தவறாகவும், ஆபாசமாகவும் குறுஞ்செய்திகளை மோசடி கும்பல் அனுப்புகிறது. இதனால் லோன் செயலிகள் மூலம் கடன் பெறுவோர், வேலையிடங்களிலும், உறவினர்களிடத்திலும் பல்வேறு அவமானங்களுக்கு உள்ளாக்கப்படுவதுடன் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

பெரிய அளவிலான பண இழப்பும் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் அவசர தேவைக்காகவோ அல்லது வேறு ஏதும் காரணங்களுக்காகவோ இத்தகைய லோன் செயலிகளின் மூலம் லோன் பெற வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

newstm.in

Next Story
Share it