நடிப்பில் ஆர்வம் உள்ளவர்களா நீங்கள்..? நடிகர் சித்தார்த் அழைப்பு..!

நடிப்பில் ஆர்வம் உள்ளவர்களா நீங்கள்..? நடிகர் சித்தார்த் அழைப்பு..!

நடிப்பில் ஆர்வம் உள்ளவர்களா நீங்கள்..? நடிகர் சித்தார்த் அழைப்பு..!
X

நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகும் அவருடைய 35-வது படத்தில் நடிக்க ஆண், பெண் மற்றும் குழந்தை உள்ளிட்டோர் தேவை என்கிற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சித்தார்த். சினிமா சார்ந்த பல்வேறு தளங்களில் தன்னை அவர் முன்னிறுத்து வருகிறார். இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள ‘நவரஸா’ ஆந்தாலஜி படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளிவர தயாராகவுள்ளது.

இந்நிலையில் மேலும் ஒரு புதிய படத்தில் அவர் நடிக்கிறார். இது நடிகர் சித்தார்த்தில் 35-வது படமாக தயாராகவுள்ளது. இதற்காக 30 - 35 வயதுள்ள ஆண் நடிகர்கள் தேவைப்படுவதாகவும், வடஇந்திய முகச்சாயல் கொண்ட 30 - 50 வயதுள்ள ஆண் நடிகர்களும் தேவைப்படுவதாகவும், வடஇந்திய முகச்சாயல் கொண்ட 20 - 30 வயதுள்ள பெண் நடிகர்களும், 6 - 8 வயதுள்ள குழந்தை நட்சத்திரங்களும் தேவைப்படுவதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1

நடிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் 5 புகைப்படங்களை [email protected] என்ற மெயிலுக்கோ அல்லது 9626230062 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கோ அனுப்ப சித்தார்த் கேட்டுக் கொண்டுள்ளார். புகைப்படங்களை அனுப்ப கடைசி நாள் ஆகஸ்ட் 15 என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:
Next Story
Share it