Theme Check

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்..!!

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்..!!

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்..!!
X

பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. போரூர் பகுதி: கோவூர் தண்டலம், ஆதிலட்சுமி நகர், மதுரா அவென்யூ, ஆகாஷ் நகர், தரபாக்கம் காவனூர் நடைபாதை தெரு, தச்சர் தெரு, பொன்னியமன் கோயில் தெரு, லாலா சத்திரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள். பெரம்பூர்/பெரியார் நகர் பகுதி: எஸ்.ஆர்.பி மெயின் ரோடு/காலனி, ராம்நகர், கே.சி கார்டன், பேப்பர் மில்ஸ் பிரிவு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கிருஷ்ணகிரி மின்பகிர்மான வட்டம் போச்சம்பள்ளி கோட்டத்துக்கு உட்பட்ட ஊத்தங்கரை துணை மின் நிலையத்தில் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் காரணமாக உயர்மின் பாதையை மாற்றி அமைக்கும் பணி நடக்கிறது. எனவே 26-02-22-சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை காமராஜ் நகர், எழில்நகர், கலைஞர் நகர், வித்யா நகர், அம்பேத்கர் நகர், நேரு நகர், பனந்தோப்பு, பஸ் நிலைய பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது என்று போச்சம்பள்ளி மின்வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி தனது செய்தி குறிப்பில் தெரிவித்தார்.

கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள துணை மின்நிலையத்தில் பராமரிப்புபணி காரணமாக 5 இடங்களில் மின்தடை போடப்படும் என்று மின்சாரத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தார். 26ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை போடப்படும் என்று மின்சாரத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Next Story
Share it