Theme Check

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு.. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது கோர்ட்..!

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு.. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது கோர்ட்..!

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு.. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது கோர்ட்..!
X

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த 17 வயது மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து, மாணவியை மதமாற பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தியதால்தான் தற்கொலை என்று ஒருதரப்பினரும், விடுதிக் காப்பாளர் திட்டியதால்தான் தற்கொலை என மற்றொரு தரப்பினரும் கூறிவந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மாணவியின் இறப்பிற்கு பிறகு வீடியோவை பரப்புவதற்கு காரணம் என்னவென்று விசாரணையின்போது அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

மேலும், விசாரணை முறையாக, வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படுகிறது எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மாணவியின் வீடியோவை எடுத்த முத்துவேல் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைக்கவில்லை எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் மாணவியின் பெற்றோருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை குறைந்து விட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

Next Story
Share it