பொதுமக்கள் 19 பேரை சுட்டுக் கொன்ற ராணுவம்! அதிர்ச்சி பின்னணி!!
பொதுமக்கள் 19 பேரை சுட்டுக் கொன்ற ராணுவம்! அதிர்ச்சி பின்னணி!!

நாகாலாந்தில் பயங்கரவாதிகள் என நினைத்து பொதுமக்களை ராணுவம் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகாலாந்து மோன் மாவட்டத்தில் திரு என்ற கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அங்குள்ள நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் வேலை முடிந்து வேன் ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது பாதுகாப்புப்படை வீரர்கள் அந்த வேனை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
அதில் தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக தமக்கு தகவல் வந்ததாகவும், அதனால் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்காக ராணுவத்தினர் வருத்தம் தெரிவித்தனர்.

ஆனால் ஆத்திரம் அடைந்த மக்கள் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது தற்காப்பிற்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதில், பொதுமக்கள் 5 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மூன்று ராணுவ வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

அவர்கள் 6 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனைடுத்து மோன் மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து, சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விரிவான விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கும், ராணுவத்தினருக்கும் பாதுகாப்பு இல்லாத நாட்டில் உள்துறை அமைச்சகம் என்னதான் செய்து கொண்டிருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.
இச்சம்பவத்தை அடுத்து மோன் மாவட்டத்தில் இணையச் சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. பதற்றமான சூழல் உள்ளதால் இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
newstm.in

