Theme Check

வரதட்சணை கேட்டு மனைவியின் விரலை வெட்டிய ராணுவ மேஜர்!!

வரதட்சணை கேட்டு மனைவியின் விரலை வெட்டிய ராணுவ மேஜர்!!

வரதட்சணை கேட்டு மனைவியின் விரலை வெட்டிய ராணுவ மேஜர்!!
X

வரதட்சணை கேட்டு ராணுவ மேஜர் ஒருவர் தனது மனைவியின் விரலை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், மீரட் நகரத்தைச் சேர்ந்த சுதேஷ்பால் சிங் என்பவர் தனது மகள் பூஜா தோமரை கடந்த 2014ஆம் ஆண்டு ராணவ மேஜர் ஒருவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.

திருமணத்திற்காக 60 சவரன் தங்க நகைகள், கார், 3 ஏக்கர் நிலம் ஆகியவற்றை சுதேஷ்பால் சிங் வரதட்சணையாக கொடுத்துள்ளார். ஆனாலும் வரதட்சணை போதாது எனக்கூறி ராணவ மேஜர் மனைவியை அடித்து கொடுமைப் படுத்தி வந்துள்ளார்.

abuse

இந்நிலையில் அவசரமாக ரூ.10 லட்சம் கேட்டு மனைவியை அடித்து கொடுமை படுத்தியுள்ளார். இதில் அவர் கீழே மயங்கி விழுந்துள்ளார். அப்போது ராணுவ மேஜர் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மனைவியின் விரலை வெட்டி எடுத்துள்ளார்.

இவரின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சுதேஷ்பால் சிங் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால், அவர் ராணுவ மேஜர் என்பதால் போலீஸார் வழக்குப் பதிவு செய்ய மறுத்தனர். இதையடுத்து சுதேஷ்பால் சிங் இந்த சம்பவம் குறித்து குடியரசுத் தலைவருக்குப் புகார் கடிதம் எழுதியுள்ளார்.

newstm.in

Next Story
Share it