ராணுவ அதிகாரி குடும்பம் பலி ! தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் !! தொடரும் பதற்றம் !!
ராணுவ அதிகாரி குடும்பம் பலி ! தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் !! தொடரும் பதற்றம் !!

மணிப்பூரில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 10 மணியளவில், மணிப்பூர் மாநிலத்தில் மியான்மார் எல்லையை ஒட்டிய சூராசந்த்பூர் மாவட்டத்தில் ராணுவ அதிகாரி சென்றுள்ளார். இந்த நிலையில், ராணுவ அதிகாரி மற்றும் அவர்களுக்கு பாதுகாப்புக்காக வந்த வாகனத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
அந்தத் தாக்குதலில், கர்னல் ரேங்கில் உள்ள அதிகாரி அவரது மனைவி மற்றும் 7 வயது மகன் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் அவர்களுடன் பாதுகாப்புக்குச் சென்ற அசாம் ரைஃபில்ஸ் படை வீரர்கள் என மொத்தம் 6 பேருமே இந்தத் தாக்குதல் கொல்லப்பட்டனர். மணிப்பூரில் அண்மைக் காலத்தில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மணிப்பூரில் அசாம் ரைபில்ஸ் படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை வண்மையாகக் கண்டிக்கிறேன். இதில் உயிரிழந்த வீரர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். அவர்களின் குடும்பத்தாருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் மிகப் பெரிய மற்றும் மோசமான தீவிரவாத இயக்கமான மக்கள் விடுதலை ராணுவம் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
newstm.in

