ராணுவம் பதிலடி.. எல்லையில் 2 வாரத்தில் 15 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை !!
ராணுவம் பதிலடி.. எல்லையில் 2 வாரத்தில் 15 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை !!

அண்மைக்காலமாக காஷ்மீர் எல்லையில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் தலையெடுத்துள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அண்மையில் ஜம்முவில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜம்மு விமானதள வளாகத்தில் உள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த விமானப்படை நிலைய தொழில்நுட்ப பகுதியில் கடந்த ஜூலை கடைசியில் ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டுவெடி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த குண்டுவெடிப்பில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த 2 பேர் காயமடைந்துள்ளனர். ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதும் ராணுவம் உடனடியாக நடவடிக்கையில் இறங்கியது. ராடார் மூலம் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டதால் தொடர் தாக்குதல் நடத்தப்படவில்லை. இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீவிரவாத அமைப்புகளை ஒடுக்கும் விதமாக, ஜம்மு - காஷ்மீரில் கடந்த இரண்டு வாரங்களில் பதினைந்து தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் நகரில் பாதுகாப்பு படையினரின் தாக்குதலால் மூன்று லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவர்கள் மூன்று பேரில் தீவிரவாதி ஆரிஃப் ஹஜாம் கடந்த 2019 ஆம் ஆண்டில் அன்று ராணுவ வீரரைக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்தவராவார். மற்ற இரண்டு தீவிரவாதிகள் தெல்வானியைச் சேர்ந்த பசித் அகமது, புல்வாமாவைச் சேர்ந்த சுஹைல் அகமது என்பது அடையாளம் காணப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
newstm.in

