Theme Check

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்- ராணுவ வீரர்கள் வீர மரணம் !!

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்- ராணுவ வீரர்கள் வீர மரணம் !!

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்- ராணுவ வீரர்கள் வீர மரணம் !!
X

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் ஷோபியன் பகுதியில் உள்ள செர்மார்க், ஜைனாபோரா பகுதியில் நேற்று பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

indian army

இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சோபியான் மாவட்டத்தில் உள்ள செர்மார்க் என்ற இடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினர் மீதும் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

indian army

நீண்ட நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் இரு ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சந்தோஷ் யாதவ், சவான் ரோமித் தனாஜி என்ற இரு வீரர்கள் உயிரிழந்தனர். நேற்று நடைபெற்ற தாக்குதலில் பயங்கரவாதிகளில் ஒருவர் ராணுவத்தினாரால் கொல்லப்பட்டார். ஒரே இடத்தில் இரண்டு நாட்களாக பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் நீடித்தது.


newstm.in

Tags:
Next Story
Share it