இமயமலை எல்லையில் கபடி விளையாடும் ராணுவ வீரர்கள்- வீடியோ வைரல் !!
இமயமலை எல்லையில் கபடி விளையாடும் ராணுவ வீரர்கள்- வீடியோ வைரல் !!

எல்லை காவல் வீரர்களான, ராணுவ வீரர்கள் ஓய்வு நேரத்தில் கபடி விளையாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடும் வெயில், பனி, கொட்டும் மழைக்கு இடையே எல்லையில் நின்று காவல் காத்து வருகின்றனர் ராணுவ வீரர்கள். அந்த வகையில், இமாசலபிரதேசத்தில் உள்ள இமயமலை எல்லையில் இந்தோ திபெத்திய எல்லை காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

தற்போது அவ்விடங்களில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் அதற்கு ஏற்ற ஆடைகளை அணிந்தப்படியே வீரர்கள் உள்ளனர். இந்நிலையில் கடும் பனியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ஹிம்வீர்ஸ் என்றழைக்கப்படும் இமயமலை வீரர்கள், ஓய்வு நேரத்தில் கபடி விளையாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அவர்கள் கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் இமயமலையில் கம்பளி ஆடைகளை அணிந்துகொண்டு கபடி விளையாடும் வீடியோ அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
#WATCH 'Himveers' of Indo-Tibetan Border Police (ITBP) play Kabaddi in the snow in the high Himalayas in Himachal Pradesh pic.twitter.com/Ir146AhWTv
— ANI (@ANI) March 13, 2022
newstm.in

